‘வனிதா போயாச்சு.. இனி சண்டைக்கு..?’- மீராகிட்ட கொஞ்சம் கொளுத்திபோட்டா போதும் போலயே..! - Master Mind
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 15, 2019 01:10 AM
பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, அந்த வீட்டில் பிரச்சனை பண்ணவும், அதை பற்றி பேசவும் ஆள் இல்லையே என ஹவுஸ்மேட்ஸ் கவலையில் இருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஃபாத்திமா பாபு-வை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் வீட்டிற்குள் தொடக்கம் முதலே எல்லா பிரச்சனைகளிலும் மூக்கை நுழைத்து சிறிய பிரச்சனையை கூட பேசி பேசி பெரிதாக்குபவர் வனிதா என்ற கருத்து பரவலாக மக்கள் மத்தியிலும், ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் நிலவுகிறது.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேறியதால் வீட்டில் இனி கலட்டா செய்ய யாரு இருக்கா என கவின், சரவணன், சாண்டி உள்ளிட்டோர் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, ‘கவலைப்படாதீர்கள் நான் வனிதாவுக்கு மேல பேசுவேன்.. ஒத்துவரல என்றால் பச்சை பச்சையாக பேசுவேன் எதுக்கும் பயப்படமாட்டேன்.. வாய்ப்பு கொடுப்பேன்.. ஒரு அளவுக்கு தான் லிமிட்.. எனக்கு துணிச்சல் இருக்கு’ என மார்தட்டி சொன்னார்.
இடைமறித்த கவின், ‘10 பாயிண்ட் பேசினா நீ இடத்தை காலிப்பண்ணிடுவ.. ஆனால் வனிதா அக்கா அப்படி போய் பாத்திருக்கியா? மத்தவங்கள தான் ஓட விடுவாங்க அவுங்க ஓட மாட்டாங்க என்றார். மேலும், மீரா அங்கிருந்து சென்றதும், இதை லைட்டா கொளுத்துவிட்ட போதும் போலயே காட்டையே எரிச்சுவிட்ரும் .. ஏதோ நம்மலால முடிஞ்சது’ என கூறி எபிசோடை முடித்தார்.