“என் சிம்பா வந்தாச்சு..!” - அம்மாவானார் முன்னாள் பிக் பாஸ் பிரபலம்
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 22, 2019 12:17 PM
பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துக் கொண்டு பிரபலமான நடிகை சுஜா வருணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் நுழைந்து மக்கள் மத்தியில் பிரபலமானார். திரைப்படங்களில் நடித்து வந்த சுஜா வருணி தனது நண்பரும் நீண்ட நாள் காதலருமான சிவாஜி தேவ் என்ற சிவக்குமாரை கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி சுஜா வருணி திருமணம் செய்துக் கொண்டார். ‘சிங்கக்குட்டி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிவக்குமார், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்ப்பமாக இருந்த சுஜா வருணியின் சீமந்தம் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுஜா வருணி-சிவக்குமார் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது ட்வீட்டில், “பையன், என் சிம்பா வந்தாச்சு. விரைவில் உங்களை சந்திப்பான். ஆக.21 வாழ்வில் மறக்க முடியாத நாள் எனக்கு. நான் நடித்த FINGERTIP என்ற வெப் சீரிஸும் ஆன்றைக்கு தான் ரிலீஸ். என் மகனும் இந்த பூமிக்கு வந்த நாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.