அப்பா மகள் உறவில் விழுந்த விரிசல்..- நாமினேஷனில் அதிரவைத்த லாஸ்லியா!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 19, 2019 10:52 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் கணக்குகள் தீர்ந்து போக, பாச கணக்குகளில் விரிசல் விழ தொடங்கியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல், நட்பையும் தாண்டி அப்பா - மகள் பாசம் அனைவராலும் விரும்பப்பட்டது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக நடந்த கலவரத்தில் இந்த உறவிலும் விரிசல் ஏற்பட்டது பார்வையாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
கஸ்தூரி வைல்ட் கார்ட், வனிதாவின் ரீ-எண்ட்ரி, அபிராமி-முகென் ஒருதலை காதல் பிரிவு, மதுமிதாவின் ஆண்/பெண் பாகுபாடு, தன்னை தானே காயப்படுத்திக் கொண்ட நிகழ்வு போன்றவற்றால் பிக் பாஸ் வீடே கடந்த ஒரு வாரமாக படு மோசமான நிலையில் இருந்தது. இதன் காரணமாக சேரன், லாஸ்லியா இடையிலான அப்பா-மகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுமிதா பிக் பாஸ் விதியை மீறியதால் வெளியேற்றப்பட்டார், அவரைத் தொடர்ந்து வாராவாரம் நாமினேட் செய்யப்பட்ட அபிராமி மக்களின் குறைவான வாக்குகளால் வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து, இந்த் வாரத்துக்கான நாமினேஷன் புராசஸ் நடைபெறும் முதல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த புரொமோவில், கன்ஃபெஷன் ரூமில் சேரன் அப்பாவை லாஸ்லியா நாமினேட் செய்தார். ஒருபோது அப்பாவை நாமினேட் செய்ய மாட்டேன் என்றும், எந்த சூழலிலும் சேரப்பாவுக்கு ஆதரவாக இருந்த லாஸ்லியா தற்போது அவர் பிரச்சனையின் போது அமைதி காத்ததால் நாமினேட் செய்வதாக காரணம் கூறியுள்ளார்.
அப்பா-மகள் இடையே எத்தனை கருத்து வேறுபாடு இருந்தாலும், அந்த பாசம் என்றைக்கும் தோற்றுப்போகாது என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் உள்ளது. எனினும், இந்த வாரம் இந்த நாமினேஷனில் என்ன நடக்கும் இந்த உறவு நீடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அப்பா மகள் உறவில் விழுந்த விரிசல்..- நாமினேஷனில் அதிரவைத்த லாஸ்லியா! வீடியோ