“அப்பா-அம்மா அவங்க வாழ்க்கைய வாழல.. ”- நாமினேஷனில் Emotional ஆன தர்ஷன்
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 19, 2019 04:58 PM
விஜய் டியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் போராட்டங்கள் ஓய்ந்த தற்போது பாசப்போராட்டம் தொடங்கியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்துக்கான நாமினேஷன் புராசஸ் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகவுள்ளது. அதையொட்டி இன்று வெளியான இரண்டு புரொமோ வீடியோக்களிலும், சேரன் அப்பாவின் தவறை சுட்டிக் காட்டி நாமினேட் செய்த லாஸ்லியா, மகள் லாஸ்லியா நாமினேட் செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கையில் ஏமாந்து போன சேரன் அப்பா என பாச போராட்டங்களின் காட்சிகள் இடம்பெற்றன.
அதையடுத்து வெளியான 3வது புரொமோ வீடியோவில், பிக் பாஸ் வீட்டில் 50 நாட்களை கடந்துள்ள நிலையில், தனது அனுபவத்தினை பகிர்ந்துக் கொள்ளுமாறு தர்ஷனிடம் பிக் பாஸ் தெரிவித்தார். அப்போது பேசிய தர்ஷன், படத்தில் தான் அப்பா அம்மா பிள்ளைங்களுக்காக தியாகம் செய்றது பார்த்து இருக்கோம்.. ஆனா இங்க இப்போ நான் நல்லா இருக்க காரணமா இருக்க அப்பா-அம்மா பத்தி யோசிக்கும் போது அவங்க அவங்க வாழ்க்கைய வாழல என்று கூறி உணர்ச்சி வசப்பட்டார்.
ஆக, அப்பா-அம்மா பிள்ளைங்க மீது காட்டும் அன்பிற்கு எதுவும் இணையில்லை என்பதால் இன்றைய எபிசோடின் முடிவில் சேரன் அப்பா லாஸ்லியா மகள் இடையிலான கருத்து வேறுபாடு களைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“அப்பா-அம்மா அவங்க வாழ்க்கைய வாழல.. ”- நாமினேஷனில் EMOTIONAL ஆன தர்ஷன் வீடியோ