"நீ நல்லவன் தான்!!" - கவினுக்கு Green Signal கொடுத்த சேரன், லாஸ்லியா Happy
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 22, 2019 10:20 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 4 பெண்களுடன் பழகிய கவின் என்று அவருக்கு ஒரு அடையாளம் இருந்து வந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் கவினுக்கு ஆதரவுகள் அதிகரித்துள்ளன.

பிக் பாஸ் வீட்டில், நட்பு, காதல், மோதல் என ஒரு விதமாக அனைத்தும் ஓய்ந்த நிலையில், வைல்ட் கார்ட் எண்ட்ரியில் உள்ளே வந்த கஸ்தூரி மற்றும் வனிதா ஆகியோர் தங்கள் பங்கிற்கு பிரச்சனையை கிளப்ப முயற்சித்து வருகின்றனர்.
இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே காதல் சர்ச்சைகளில் பலமாக சிக்கிய கவின், 4 பெண்களுடன் பழகி அவர்களின் உணர்வுகளுடன் விளையாடினார் என்ற பெரும் குற்றச்சாட்டு ஒட்டிக் கொண்டே வருகிறது. எந்த பிரச்சனையில் கவின் தலையிட்டாலும், இந்த பிரச்சனையை முன்னிறுத்தி பலரும் அவரது உணர்வுகளுடன் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோ வீடியோவில், கார்டன் ஏரியாவில் பிக் பாஸ் கொடுத்த டாஸ்கின்படி, கவினின் குணாதியம், பண்புகள், நட்பிற்கு அவர் அளிக்கும் மரியாதையை லாஸ்லியா புகழந்தார். ஆனால், சுவாரஸ்யம் அதுவல்ல, கவினை பற்றி தான் புரிந்துக் கொள்ள காலதாமதமானதாக கூறிய சேரன் “சில தவறுகள் தெரியாமல் நடக்கின்றன. அதனால் நீ கெட்டவன் இல்ல நல்லவன் தான்” என்றார்.
வழக்கமாக காரசாரமான விவாதம், வாக்குவாதம், சண்டை என பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களின் புரொமோக்கள் இருந்த நிலையில், தற்போது மென்மையான புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆக, இதன் மூலம் சேரப்பா கவினை புகழ, லாஸ்லியா மகிழ இன்றைய எபிசோடில் இந்த போர்ஷன் ஹைலைட்டாக அமையும் என்று தெரிகிறது.
"நீ நல்லவன் தான்!!" - கவினுக்கு GREEN SIGNAL கொடுத்த சேரன், லாஸ்லியா HAPPY வீடியோ