ஆணா பெண்ணா? நீயா நானா..? - பிக் பாஸில் முற்றும் பாலின பஞ்சாயத்து!!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 14, 2019 04:57 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான 3வது புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இதுவரை காதல், நட்பு, முக்கோண காதல் என்று போய்க் கொண்டிருக்க, கவின் -லாஸ்லியா-சாக்ஷி இடையிலான காதல் கதை மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 3 வாரங்களாக நாமினேஷனில் வந்த சாக்ஷி கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீடு சற்றிய அமைதியாக இருந்த நிலையில், புயலை கிளப்பும் விதமாக வைல்ட் கார்ட் எண்ட்ரியில் கஸ்தூரி உள்ளே வந்தார். அவர் வந்தும் பெரிதாக சுவாரஸ்யம் இல்லாமல்போனதால், சிறப்பு விருந்தினராக, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா அதிரடியாக உள்ளே வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்த வனிதா, வந்த உடன் அபிராமி-முகென் இடையிலான ஒருதலை காதலை பிரித்து வைத்து தனது மிஷனை முடித்தார். அவரது அடுத்த டார்கெட் தற்போது கவின் மற்றும் லாஸ்லியா போல் தெரிகிறது. இதற்கு இருவரிடமும் நேரடியாக பற்ற வைத்தால் வேலைக்காகாது என்பதனால், மதுமிதாவை தூண்டிவிட்டு கவின் மற்றும் லாஸ்லியா இடையிலான உறவுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வனிதா மாஸ்டர் பிளான் போட்டிருப்பதாக தெரிகிறது.
தற்போது ஹவுஸ்மேட்ஸ் இடையே ஆண்-பெண் என்ற பாலின பாகுபாடு குறித்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தற்போது 3வது புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அடிமைப்படுத்துவதாக ஆண்களை குற்றம் சாட்டும் மதுமிதாவை கேள்வி கேட்ட கவினை 4 பெண்களை யூஸ் செய்ததாக மதுமிதா கூறியது தன்னை மிகவும் காயப்படுத்தியதாக கவின் கண்ணீர் வடித்தார்.
புரொமோ வீடியோவில், இரெண்டு கேள்வி கேட்டதற்கு, மீண்டும் அதே விஷயத்தை வைத்து பேசுவது முறையா? ஒரு முறை கூட நாங்கள் பெண்கள், ஆண்கள் என்று வேறுபாடாக கருதியதில்லை. கேப்டன்சி டாஸ்க்கில் மதுமிதாவிற்கு அடிப்பட்ட போது, அவருக்காக போட்டியை விட்டு கொடுத்தவன் நான் என சாண்டியும் கூற, கஸ்தூரி என்னவோ ஜெயிலுக்குள் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இன்றைய எபிசோடில் இதற்கான காரணம் என்னவென்று தெரிய வரும்.
ஆணா பெண்ணா? நீயா நானா..? - பிக் பாஸில் முற்றும் பாலின பஞ்சாயத்து!! வீடியோ