“குள்ள குள்ள வாத்து குவ்வா குவ்வா வாத்து...”- வனிதாவிடம் சிக்கிய வாத்தியாரம்மா..!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 20, 2019 01:04 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பள்ளியாக மாறியுள்ள பிக் பாஸ் வீட்டில் டீச்சருக்கும், மாணவிக்கும் வாக்குவாதம் முற்றும் 2வது புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வார எவிக்ஷன் நாமினேஷனுக்கு பிறகு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கில், பிக்பாஸ் வீடு ஒரு பள்ளி போலவும், கஸ்தூரி, சேரன் ஆகிய இருவரும் ஆசிரியர்களாகவும் மற்றவர்கள் பள்ளி மாணவர்களாகவும் நடித்து வருகின்றனர். இதில் லாஸ்லியா பள்ளி சிறுமியாகவே மாறி சிணுங்குவது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
வழக்கம்போல் சாண்டி மாஸ்டர் டீச்சர் கஸ்தூரியை ஸ்கூல் ஆயா என கலயாக்கிறார். இது ஒரு புறம் இருக்க, தர்ஷன், ஷெரின், முகென் ஆகியோர் ரொமான்ஸில் கலக்குகின்றனர். இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள 2வது புரொமோ வீடியோவில், டீச்சராக இருக்கும் கஸ்தூரி வனிதாவை ‘வாத்து’ என கூறி அழைத்ததை ஏற்க முடியாமல், டீச்சரா இருந்தாலும் தப்பு பண்ணினா மன்னிபு கேட்கணும் என்று வாதாடுகிறார்.
பிரச்சனை அலைகள் சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், பத்த வச்சிட்டீயே பரட்ட என்ற ரேஞ்சில், கஸ்தூரி கொளுத்திவிட, வனிதா பற்றி எரிவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“குள்ள குள்ள வாத்து குவ்வா குவ்வா வாத்து...”- வனிதாவிடம் சிக்கிய வாத்தியாரம்மா..! வீடியோ