பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி பகிர்ந்த புகைப்படம்
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 19, 2019 12:14 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து 9வது போட்டியாளராக வெளியேற்றப்பட்ட அபிராமி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரத்துக்கான நாமினேஷனில் இடம்பெற்ற அபிராமி, கவின், முகென், லாஸ்லியா ஆகியோரில் அபிராமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அபிராமியின் எவிக்ஷனை கேட்டதும், ஷெரின் மற்றும் லாஸ்லியா மிகுந்த மன வருத்தம் அடைந்தனர்.
பிக் பாஸ் வீட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு குழந்தை போல் லாஸ்லியா கதறி அழுதது அவரது ஆர்மியனரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி, முதலாக தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தற்போது அபிராமி, தனது நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியை குவித்து வரும் அஜித்குமாரின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார்.