“இப்போ என்ன குண்டுன்னு சொல்ல வரீங்களா...?” கஸ்தூரியிடம் எகிறிய வனிதா!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 20, 2019 05:23 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் கஸ்தூரி தன்னை உருவ கேலி செய்ததற்கு வனிதா கடுப்பான புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் தினுசுதினுசாக பிரச்சனைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. வைல்ட் கார்ட் எண்ட்ரியில் உள்ளே வந்த கஸ்தூரி மற்றும் வனிதா ஆகியோர் இடையே ஆரம்பத்தில் இருந்தே கருத்து வேறுபாடு இருப்பதாக கருதிய நிலையில், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் நிகழ்ச்சியில் வத்திக்குச்சி என்று கூறியதையே வனிதா விரும்பாதது அவரது முக பாவனையில் தெரிந்தது. இந்நிலையில், இன்றைய லக்ஸுரி பட்ஜெட்டுக்கான ஸ்கூல் டாஸ்கில் ‘வாத்து’ என்று கஸ்தூரி வனிதாவை வம்புக்கு இழுத்தார்.
அப்போதே இதனை கண்டித்த வனிதா, டீச்சரான கஸ்தூரி தன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று போராடினார். அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள 3வது புரொமோவில், டாஸ்க் முடிந்த பிறகு ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் கஸ்தூரி பேசிக் கொண்டிருக்க, கோவமாக வந்த வனிதா, ‘என்ன இப்போ நான் குண்டுன்னு சொல்ல வரீங்களா.. 18 வயதில் எனக்கு பையன் இருக்கான்.. 3 குழந்தைங்க இருக்காங்க.. என்ன பாத்தா அப்படியா தெரியுது.. நீங்க பேசாதீங்க.. வேணும்னே என்ன இழுக்குறீங்க..’ என கொந்தளித்தார்.
இந்த வாரம் யாரிடம் கொளுத்தி போட்டு பிரச்சனையை உருவாக்குவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில், அதிரடியாக தானே களத்தில் இறங்கும் விதமாக வனிதா புதிய யுக்தியை கையாண்டுள்ளாரா அல்லது கஸ்தூரி வனிதாவை பற்ற வைத்து பிக் பாஸ் ஹவுஸை பற்றி எரிய வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
“இப்போ என்ன குண்டுன்னு சொல்ல வரீங்களா...?” கஸ்தூரியிடம் எகிறிய வனிதா! வீடியோ