பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மது, என்ன சொன்னார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 17, 2019 10:44 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் விதியை மீறி தனக்கு தானே தீங்கு விளைவிக்கும் விதமாக நடந்துக் கொண்ட மதுமிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பாட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்துக்கான கேப்டன்ஸி டாஸ்க்கில் வெற்றி பெற்று கேப்டன் ஆன மதுமிதா, ஹலோ ஆப்-டாஸ்கில் நடந்த விவாதத்தில் பேசிய வார்த்தைகளை வைத்து ஹவுஸ்மேட்ஸ் அவரை டார்கெட் செய்து, இழிவாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால், தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
கோபத்தின் உச்சத்தில் மதுமிதா எடுத்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்தாலும், பிக் பாஸ் வீட்டின் விதியை மீறி தனக்கு தானே தீங்கு விளைவித்துக் கொள்ளும் விதமாக நடந்துக் கொண்ட மதுமிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
தனது கருத்தை ஆழமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இப்படி ஓர் முடிவை ஏற்க நேர்ந்ததாக மதுமிதா கூறினாலும், இது பார்வையாளர்களுக்கும், மதுமிதாவை ஆதரிப்பவர்களுக்கும் தவறான முன்னுதாரணமாக அமைந்ததாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மதுமிதா, ஹவுஸ்மேட்ஸை சந்திக்க விருப்பமா என்றதற்கு ஆம் என்றார். பின்னர் அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்ஸை சந்தித்த மதுமிதா, சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர மற்றவர்களின் முகத்தை பார்க்கக் கூட விரும்பவில்லை என்றார். இந்த வீட்டில் டைட்டில் வின்னராகும் தகுதி இந்த இருவருக்கு மட்டுமே இருப்பதாகவும், தனது கோபத்தினை வெளிப்படுத்தினார்.