பிக் பாஸ் சாண்டி மாஸ்டரின் செல்லாக்குட்டியை சந்தித்த அபிராமி!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 22, 2019 11:21 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து இறுதியாக வெளியேறிய நடிகை அபிராமி, சக போட்டியாளரான சாண்டி மாஸ்டரின் மனைவி மற்றும் மகளை சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து ஃபாத்திமா பாபு, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா ஆகியோரை தொடர்ந்து அபிராமி 9வது போட்டியாளராக வெளியேறினார். இதில் இரண்டாவது வாரத்தில் எவிக்ட் ஆன வனிதா, கடந்த வாரம் மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வந்ததும், முன்னதாக வெளியேறியதில் தனக்கு பிடித்த போட்டியாளர்களின் குடும்பத்தை வரிசையாக அபிராமி சந்தித்து வருகிறார். அதன்படி, முதலில் மோகன் வைத்தியவை சந்தித்த அபி, தோழி சாக்ஷியை சந்தித்தார். அதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளையாக கருதப்படும் சாண்டி மாஸ்டரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
சாண்டியின் மனைவி மற்றும் செல்ல மகள் லாலாவுடன் அபிராமி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக சரவணனும் சாண்டியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் மூலம் அபிராமி வெங்கடாச்சலம் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.