Who is the Dog Voice? - கிச்சனில் கூச்சலிடும் வனிதா-கஸ்தூரி
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 21, 2019 12:43 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் வனிதாவை வாத்து என்று விமர்சித்த கஸ்தூரி மீண்டும் அதே பிரச்சனையை கிளப்பும் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
![Bigg Boss Tamil 3 Vijay TV Vanitha Kasthiri Dog Cat fight Promo 2 Bigg Boss Tamil 3 Vijay TV Vanitha Kasthiri Dog Cat fight Promo 2](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/bigg-boss-tamil-3-vijay-tv-vanitha-kasthiri-dog-cat-fight-promo-2-photos-pictures-stills.jpg)
பிக் பாஸ் வீடு பள்ளிக்கூடம் போலவும், ஹவுஸ்மேட்ஸில் சேரன் தலைமை ஆசிரியராகவும், கஸ்தூரி டீச்சராகவும், மற்ற அனைவரும் மாணவர்களாகவும் நடித்து வருகின்றனர். இந்த டாஸ்க்கில் டீச்சராக இருக்கும் கஸ்தூரி வனிதாவை டார்கெட் செய்வது போல் அவரை உருவ கேலி செய்ய, இதனால் கடுப்பான வனிதா அதனை அங்கேயே அப்போதே தட்டிக் கேட்டார்.
இந்த பிரச்சனையை மீண்டும் வளர்த்துவிட பார்க்கும் விதமாக கஸ்தூரி வனிதாவை மீண்டும் சீண்டுகிறார். சமையல் அறையில் கஸ்தூரி மற்றும் வனிதா இடையே இது குறித்த வாக்குவாதம் எழ, அதனை மிமிக்ரி செய்யும் விதமாக கார்டன் ஏரியாவில் உள்ள சேரன், லாஸ்லியா, கவின், சாண்டி, முகென் ஆகியோர் பூனை மற்றும் நாயை போல் சவுண்டுவிடும் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்க்கும் போது கிச்சனில் நடந்த சலசலப்பில் யார் நாய்? யார் பூனை? என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.
WHO IS THE DOG VOICE? - கிச்சனில் கூச்சலிடும் வனிதா-கஸ்தூரி வீடியோ