தமிழ் பொண்ணு, கலாச்சாரம் என்று கூறி அபிராமி, மதுமிதா இடையே மோதல் ஏற்படுவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இன்று பிக் பாஸ் வீட்டில் அபராமி அழுவது போன்ற ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
நான் ஒரு தமிழ் பொண்ணு என்று மதுமிதா கூறுவதுடன் ப்ரொமோ துவங்குகிறது. இதில் தமிழ், தமிழ் பொண்ணு வருவதற்கு எங்கே சார் இடம் இருக்கு என்று கமல் ஹாஸனிடம் கூறி அழுகிறார் அபிராமி. விளையாட்டுக்கு செய்வதற்கும், நம் கலாச்சாரத்தை பற்றி பேசுவதற்கும் தொடர்பே இல்லை. என்னது இது தமிழ் பொண்ணு, தமிழ் பொண்ணுன்னு, எனக்கு கலாச்சாரம் இல்லையா, உங்களுக்கு மட்டும் தானா என்று ஷெரின் சீறுகிறார். நான் உன் கேரக்டரை எதுவுமே சொல்லவில்லை என்று மதுமிதா கூற அபிராமியோ ஷட் அப் என்று மிரட்டுகிறார்
ஒவ்வொரு சீசனிலும் இந்த தமிழ் பொண்ணு பிரச்சனையை ஊதி பெரிதாக்குவதை வழக்கமாக வைத்துவிட்டார் பிக் பாஸ். கடந்த சீசனிலும் தமிழ் பொண்ணுங்க ஒன்றாக சேர்ந்து பேசினார்கள். என்னடா இன்னும் தமிழ் பொண்ணு, மண்ணு, கலாச்சாரம்னு பிரச்சனை கிளம்பவில்லையே என்று பார்த்த நேரத்தில் இந்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
SHUT UP!!!அபிராமி, மதுமிதா இடையே மோதல் ....! கமல் கலந்து கொள்ளும் பிக் பாஸ் ப்ரொமோ வீடியோ