தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நயன்தாராவின் அடுத்த படத்தில் பிரபல சின்னத்திரை நடிகர் வில்லனாக நடிக்க உள்ளார்.

தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். லவ் ஆக்சன் டிராமாவாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் தியான் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார்.
இப்படத்தில் வில்லனாக சின்னத்துரை பிரபலம் பிரஜன் நடிக்க உள்ளார். பிரஜன் ஏற்கனவே ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதேபோல் சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளார்.
பிரஜனின் மனைவி சான்ட்ராவும் சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது.