உலக நாயகன் படத்துக்காக குரல் கொடுக்கும் சீயான் விக்ரம் - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக நாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து வரும் படம் 'கடாரம் கொண்டான்'. இந்த படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார்.

Vikram finished his Dubbing work in Kamal Haasan's Kadaram Kondan

மேலும் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை 'தூங்காவனம்' படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார்.

இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படம் வருகிற ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் இந்த படத்தில் விக்ரம் தான் இடம் பெற்றுள்ள காட்சிகள் அனைத்துக்கும் டப்பிங் பேசி முடித்துள்ளாராம்.