உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரஸியம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புது போட்டியாளராக மீரா மிதுன் உள்ளே நுழைந்ததும் போட்டியாளர்களிடையே சிறு சலசலப்பு ஏற்பட்டு அடங்கியது.

போட்டியாளர்கள் தங்களைப் பற்றி தங்கள் வாழ்வில் நடந்த முக்கிய தருணங்களை மற்ற போட்டியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு மோகன் வைத்தியா உள்ளிட்டோர் தங்கள் வாழ்வில் நடந்த முக்கிய தருணங்கள் பற்றி பகிர்ந்து கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக பேசிய சரவணன், முதல் மனைவி தான் என் இரண்டாவது கல்யாணத்துக்கு தாலி எடுத்து கொடுத்தாள். என் பையனுக்காக தான் இரண்டாவது கல்யாணம் பண்ணேன் என்று உருக்கமாக பேசினார். அதனைக் கேட்ட மற்ற போட்டியாளர்கள் எல்லாம் கண்ணீர் சிந்துகின்றனர்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/MJ5oXxlR0A
— Vijay Television (@vijaytelevision) June 27, 2019