பிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண், பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருக்கு இன்று ( 29 .06.2019 ) பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புரசைவாக்கம் நடுநிலைப்பள்ளியில் மரம் நடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இவ்வாறு என் பிறந்த நாளை தொடங்கியுள்ளேன்.
புரசைவாக்கம் நடுநிலைப்பள்ளியில், மிக்க நன்றி விவேக் சார், எனக்கு முன்னுதாரணமாகவும், உதவிகரமாகவும் இருந்ததற்கு. உங்கள் நற்பணிகளை தொடங்கி பின்பற்றி இந்த பயணத்தை தொடங்கியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறே என் பிறந்த நாளை தொடங்கியுள்ளேன் ! புரசைவாக்கம் நடுநிலைப்பள்ளியில் ! Thank you so much @Actor_Vivek sir for inspiring & helping me out with this. உங்கள் நற்பணிகளை பின்பற்றி, இந்த பயணத்தை தொடங்கியுள்ளோம் pic.twitter.com/cOOpZWGsb6
— Harish kalyan (@iamharishkalyan) June 29, 2019