பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது காதல், மோதல், என தற்போது பரபரப்பான நிலையிலேயே இருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
போட்டியாளர்கள் தங்களைப் பற்றி தங்கள் வாழ்வில் நடந்த முக்கிய தருணங்களை மற்ற போட்டியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு மோகன் வைத்தியா உள்ளிட்டோர் தங்கள் வாழ்வில் நடந்த முக்கிய தருணங்கள் பற்றி பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் ஒரு விழாவில் கலந்துகொண்ட யாஷிகா ஆனந்திடம் நீங்கள் இந்த பிக்பாஸில் கலந்துகொள்வாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கண்டிப்பாக, ஆனால் போட்டியாளராக அல்ல, கெஸ்டாக. பிக்பாஸால் தான் நான் இங்கு இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
'கண்டிப்பா' - மீண்டும் பிக்பாஸில் கலந்துகொள்வது குறித்த கேள்விக்கு யாஷிகா பதில் வீடியோ