பிக் பாஸ் 3 வீட்டில் மோகன் வைத்யா திட்டியதால் தர்ஷன் அழுவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 ப்ரொமோ வீடியோக்களை பார்த்தாலே கடுப்பாகிறது என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. நேற்றில் இருந்து ஒரே அழுகாச்சி ப்ரொமோ வீடியோக்களாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. தர்ஷன் இன்று ப்ரொமோ வீடியோவில் அழுதுள்ளார்.
இன்று வெளியான முதல் ப்ரொமோ வீடியோவில் மீரா அழுதார். இந்நிலையில் இரண்டாவது வீடியோவில் மோகன் வைத்யா கோபப்பட்டு திட்ட தர்ஷன் ஃபீல் பண்ணி கண் கலங்குகிறார். இனி நீ என்னை அப்பா என்று அழைக்காதே அங்கிள் என்றே கூப்பிடு என மோகன் வைத்யா தர்ஷனிடம் கோபமாக கூறுகிறார். இதை பார்த்த பாத்திமா பாபு தாயுள்ளத்தோடு தர்ஷனுக்கு ஆதரவாக பேசுகிறார்
#Day5 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/HJcpgssclf
— Vijay Television (@vijaytelevision) June 28, 2019