பிக்பாஸ் வீட்டின் இன்றைய நிகழ்ச்சியில் கமல் கலந்துகொள்வதற்கான ப்ரோமோ வீடியோ சற்றுமுன் ஒளிபரப்பாகியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் ,ரேஷ்மா மற்றும் மீரா மிதுன் ஆகிய 16 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
ஒவ்வொருவரும் தங்களது வெற்றிக்காக பிக்பாஸ் இல்லத்திற்குள் கொடுக்கப்படும் டாஸ்குகளை சிறப்பாக செய்து வருகின்றனர். கடந்த வாரம் முழுக்க போட்டியாளர்கள் தங்களது வாழ்வில் நேர்ந்த கசப்பான அனுபவங்களை ஹவுஸ்சமேட்ஸ் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதால் பிக்பாஸ் வீடு கண்ணீரில் தத்தளித்தது. கூடவே சிறு சிறு சண்டைகளும் , மனஸ்தாபங்களும் வந்து சென்றது.
இந்நிலையில் வாரத்தின் இறுதியில் சனி , மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கமல் கலந்துகொண்டு பஞ்சாயத்தை தீர்த்து வைப்பார் என்பது நாம் அறிந்தவைதான். அந்தவகையில் தற்போது பிக்பாஸ் 3-வது சீசனுக்கான முதல் வாரம் இன்று என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிரிபார்ப்புகள் இருந்தது. அதனை நிவர்த்தி செய்யும் வையில் தற்போது கமல் பேசும் ப்ரோமோ வீடியோ ஒன்றை சற்றுமுன் விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
இருக்கு.. இன்னைக்கு பெரிய சம்பவம் இருக்கு! கமல் கலந்து கொள்ளும் பிக்பாஸ் 3 ப்ரோமோ இதோ! வீடியோ