www.garudabazaar.com

ஆக்ரோஷமான லுக்கில் 'கேப்டன்' ஆர்யா.. வெளியான மிரட்டலான ரிலீஸ் தேதி போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா நடிக்கும்'கேப்டன்' படத்தின் புதிய போஸ்டர்  வெளியாகி உள்ளது.

Arya Captain Movie New Look Poster with Release Date

Also Read | "சூரரைப் போற்று" இந்தி ரீமேக்.. பட ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த மாஸ் அப்டேட்!

நடிகர் ஆர்யா நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி உள்ளார்.

"கேப்டன்" திரைப்படத்தை Think Studios நிறுவனம்,  நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது.

Arya Captain Movie New Look Poster with Release Date

ஆர்யா உடன் இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

"கேப்டன்” படத்திற்கு,  D.இமான் இசையமைக்க, மதன் கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்ற, S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார்.

Arya Captain Movie New Look Poster with Release Date

படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  .  இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக ஆர்யா நடித்துள்ளார். கேப்டன் வெற்றிச் செல்வன் எனும் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 8 அன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

Arya Captain Movie New Look Poster with Release Date

இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி என அடங்கிய ரிலீஸ் தேதியும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. ஆர்யா, ஒரு கையில் துப்பாக்கியுடன் ஆக்ரோஷமாக கத்தும் புகைப்படம் போஸ்டரில் அமைந்துள்ளது.

Also Read | AK62: நடிகர் அஜித்குமார் - தயாரிப்பாளர் LYCA சுபாஸ்கரன் சந்திப்பு.. வைரலாகும் ஸ்டைலிஷ் PHOTO!

தொடர்புடைய இணைப்புகள்

Arya Captain Movie New Look Poster with Release Date

People looking for online information on Aishwarya Lekshmi, Arya, Arya Captain Movie, Captain, Captain Movie New Look Poster will find this news story useful.