Viruman Logo Top
www.garudabazaar.com

#47YearsofRajinism: “ஜில்லுமா.. எங்க குடும்பத்தோட சூப்பர்ஸ்டார்” - சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த், இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர்.

Superstar of our family Soundarya about Latha Rajinikanth

ஏறத்தாழ 47 ஆண்டுகள் அவருடைய திரைப் பயணம் தொடர்ந்து வரும் நிலையில் அவருடைய 47வது ஆண்டு திரைப்பயணம் இந்த வருடம் ரசிகர்களாலும் வெகுவாக கொண்டாடப்பட்டது. இதே போல் ரஜினிகாந்தின் மனைவி மற்றும் மகள்கள் அவருடைய இந்த திரைப்பயண கொண்டாட்டத்தில் இணைந்திருக்கின்றனர்.

Superstar of our family Soundarya about Latha Rajinikanth

இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இதுவரை 168 திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் பிரபலமான அபூர்வ ராகங்கள், பைரவி தொடங்கி அண்ணாத்த திரைப்படம் வரை ஸ்டைலிஷ் நடிகராகவும், எமோஷன்- சென்டிமென்ட்-காமெடி என ஜன ரஞ்சக நடிகராகவும் வெகுமக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் என்கிற ரசிகர்களின் அன்பான பட்டத்தால் அழைக்கப்படும் ரஜினி, தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கிறார்.

Superstar of our family Soundarya about Latha Rajinikanth

நீண்ட பஞ்ச வசனங்கள், குழந்தைகளுடனும் துணை நடிகர்களுடனும் சகஜமான காட்சிகளில் நடித்தது என ரஜினிகாந்த், தம் திரைப்படத்துக்கென்று தனி உடல் மொழிகளை பிரத்தியேகமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில்தான் ரஜினிகாந்தின் 47 ஆண்டு கால திரைப்பயணத்தைக் கொண்டாடும் வகையில் அவருடைய மகள்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அன்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 

Superstar of our family Soundarya about Latha Rajinikanth

அந்த வகையில் ரஜினிகாந்த்தின் மகளும், இயக்குனருமான சௌந்தர்யா ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், தமது தாயாரும், ரஜினியின் மனைவியுமான லதா ரஜினிகாந்த் குறித்து ஒரு நெகழ்ச்சி பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்த பதிவில், “எங்கள் லவ்லி ஜில்லுமா.. அப்பாவின் மிகப்பெரிய ரசிகர். எங்கள் குடும்பத்தின் சூப்பர்ஸ்டார்” என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். சௌந்தர்யா ரஜினிகாந்தின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Superstar of our family Soundarya about Latha Rajinikanth

People looking for online information on 47YearsofRajinism, Aishwarya Rajinikanth, Latha Rajinikanth, Rajinikanth, Soundarya rajinikanth will find this news story useful.