Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

ஆர்யா - ஐஸ்வர்யா லெஷ்மி நடிக்கும் 'கேப்டன்'.. டிரெய்லர் ரிலீஸ் எப்போ? தெறி அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா நடிக்கும்'கேப்டன்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

Trailer of Arya Captain will release on August 22nd 11am

Also Read | நெதர்லாந்து நாட்டு சாலையில் சைக்கிள் ஓட்டும் பிரியா பவானி சங்கர்.. சூப்பர் ஃபோட்டோ!

நடிகர் ஆர்யா, டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களைத் தொடர்ந்து, அவரது  நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி உள்ளார். 

“டெடி”  படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளனர்.

"கேப்டன்" திரைப்படத்தை Think Studios நிறுவனம்,  நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Trailer of Arya Captain will release on August 22nd 11am

ஆர்யா உடன் இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

"கேப்டன்” படத்திற்கு,  D.இமான் இசையமைக்க, மதன் கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார்.

Trailer of Arya Captain will release on August 22nd 11am

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 8 அன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | பா. ரஞ்சித் இயக்கும் "நட்சத்திரம் நகர்கிறது" பட டிரெய்லர்.. வெங்கட் பிரபு போட்ட வைரல் கமெண்ட்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Trailer of Arya Captain will release on August 22nd 11am

People looking for online information on Arya, Arya Captain Movie Trailer, Captain, Captain Movie Trailer updates will find this news story useful.