Kaateri logo top
www.garudabazaar.com

இத்தாலியில் இருந்து ஸ்பெயினுக்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்.. தோழிகளுடன் சேர்ந்து வெளியிட்ட PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்பெயின் நாட்டில் தோழிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Aishwarya Rajesh at Spain Barcelona Santa Maria De Montserrat Abbey

Also Read | பிரான்ஸ் டூர் முடிஞ்சது.. அடுத்து இந்த நாடு தான்! ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட VIDEO!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்க முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது.

தமிழ் சினிமாவில் நயன்தாரா, திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார்.

தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ந்து  படங்கள் வெளியாக உள்ளன.

Aishwarya Rajesh at Spain Barcelona Santa Maria De Montserrat Abbey

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம் படமும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் சுற்றுலா சென்று அங்கிருந்து ஈபிள் கோபுரம் அருகில் அமர்ந்தும் நின்றும் நடந்தும் பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Aishwarya Rajesh at Spain Barcelona Santa Maria De Montserrat Abbey

பிரான்ஸ் சுற்றுலாவை முடித்து கொண்டு  நெதர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

நெதர்லாந்து நாட்டின் காற்றாலை நகரமான Zaanse Schans & ஆம்ஸ்டர்டம் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து புதிய  புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படங்கள்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

நேற்று முன்தினம் இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கே பிரசித்தி பெற்ற கோலோசியம் அரங்கின் வெளியே எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் வாட்டிகன் நகரில் உள்ள மியூசியத்தில் எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

Aishwarya Rajesh at Spain Barcelona Santa Maria De Montserrat Abbey

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் தோழிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மோன்ட் செரட் மலையில் அமைந்துள்ள புனித பெனடிக்ட் சர்ஸ்க்கு சென்று சுற்றிய வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ்  டிரைவர் ஜமுனா படத்தில்  கால்டாக்ஸி ஓட்டுனர் வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் பி கின்ஸ்லின் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பாக சவுத்ரி என்பவர் தயாரிக்கிறார்.

அதேபோல் கண்ணன் இயக்கத்தில் "தி கிரேட் இந்தியன் கிச்சன்" படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார்.

Also Read | புகழ்பெற்ற வாடிகன் நகரில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தோழிகளுடன் வெளியிட்ட வைரல் ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajesh at Spain Barcelona Santa Maria De Montserrat Abbey

People looking for online information on Aishwarya Rajesh, Aishwarya Rajesh at Spain, Spain will find this news story useful.