Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

ஒரே இடத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர், சமீபத்தில் ஒரே இடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று, அதிகம் வைரலாகி வருகிறது.

Dhanush and aishwarya rajinikanth with their sons photo viral

Also Read | கொல மாஸ் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வெளியானது ஜெயிலர் படத்தின் FIRST LOOK போஸ்டர்!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர், தங்களின் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பின்னர், கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதியன்று, தாங்கள் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.

இது தொடர்பாக, தங்கள் இருவரும் மனமொத்து பிரியும் முடிவை எடுத்ததாகவும், தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் ஒரே நேரத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் அறிவித்திருந்தனர்.

Dhanush and aishwarya rajinikanth with their sons photo viral

இதனைத் தொடர்ந்து, இருவரும் தங்களின் திரைப்படம் மற்றும் தனிப்பட்ட வேளைகளில் கவனம் செலுத்தி வந்தனர். மாறன், தி கிரே மேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள தனுஷ், அடுத்ததாக வாத்தி, நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Dhanush and aishwarya rajinikanth with their sons photo viral

அதே போல, இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் 'பயணி' என்ற பெயரில், பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானியை வைத்து மியூசிக் ஆல்பம் ஒன்றை இயக்கி இருந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு, டைரக்ஷன் பக்கம் திரும்பி இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். அடுத்ததாக, திரைப்படத்தை இயக்கும் வேலைகளிலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தீவிரமாக உள்ளார்.

அப்படி ஒரு சூழ்நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர், தங்களின்  மகன்களுடன் ஒரே இடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Dhanush and aishwarya rajinikanth with their sons photo viral

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் பிரிந்த பிறகு, தங்களின் மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன் மாறி மாறி நேரத்தை அவர்கள் செலவிட்டு வருகின்றனர். சமீபத்தில், தி கிரே மேன் படத்தின் ப்ரீமியரின் போது, தனுஷுடன் அவரது மகன்களும் கோட் சூட் அணிந்த படி கலந்து கொண்ட புகைப்படங்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது தங்களின் இரண்டு மகன்களுடன் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இருவரும் மனம் ஒத்து பிரிந்த பின்னர், முதல் முறையாக ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்ட புகைப்படம் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷ் - ஐஸ்வர்யா ஆகியோரின் மூத்த மகனான யாத்ரா, பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக செயல்பட்டதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், பள்ளி விழா ஒன்றில் அவர்கள் இருவரும் கலந்து கொண்டார்கள் என்பதும் உறுதியாகிறது.

Dhanush and aishwarya rajinikanth with their sons photo viral

மேலும், இதில் பிரபல பாடகரான விஜய் யேசுதாஸ் தனது குடும்பத்தினருடன் உள்ளார். அனைவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை விஜய் யேசுதாஸ் மனைவி இன்ஸ்டாவில் பகிரவே, அதனை தனது இன்ஸ்டா ஸ்டோரியிலும் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

Also Read | மாஸ்.. "பொன்னியின் செல்வன்" தெலுங்கு ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பாளர்!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush and aishwarya rajinikanth with their sons photo viral

People looking for online information on Aishwarya Dhanush, Dhanush will find this news story useful.