LIGER D Logo Top
www.garudabazaar.com

‘தனுஷ் மகன் கேப்டன்’.. வைரலான ஃபோட்டோவில் ஜூனியர் கேப்டனாக நிற்பது இந்த நடிகரின் மகளா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர், தங்களின்  மகன்களுடன் பள்ளி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

SVe Shekar grand daughter junior captain in danush son school

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களின் மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன் தனித்தனியே தங்களது நேரத்தை அவ்வப்போது செலவிட்டு வந்த நிலையில், அண்மையில் இருவரும் ஒன்றிணைந்து தங்களின் மூத்த மகனான யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர்.

யாத்ரா, பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக செயல்பட்டதையடுத்து நடந்த கொண்டாட்டத்தில்தான் இருவரும் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா ஆகியோரின் மகன் படிக்கும் அதே பள்ளியில் நடந்த இந்த நிகழ்வில், இன்னொரு பிரபல நடிகரின் மகள் துணை கேப்டன் ஆகிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

ஆம், அவர் வேறு யாருமில்லை, பிரபல நடிகர் எஸ்.வி.சேகரின் பேத்தியும், அவருடைய மகன் நடிகர் அஸ்வின் சேகரின் மகளுமான அர்னா.

SVe Shekar grand daughter junior captain in danush son school

தனுஷின் - ஐஸ்வர்யா ஆகியோரின் மகன் யாத்ரா, இப்பள்ளியின் விளையாட்டு கேப்டனாக பதவியேற்ற அதே சமயம், ஆர்னா அஸ்வின் சேகர் ஜூனியர் விளையாட்டு கேப்டனாகவும் (துணை கேப்டனாக) பதவியேற்றுள்ளார்.

வைரலான யாத்ராவின் அந்த ஃபோட்டோவில் யாத்ராவுடன் நிற்கும் அந்த பெண் குழந்தைதான் ஆர்னா. இப்போது இந்த ஃபோட்டோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

SVe Shekar grand daughter junior captain in danush son school

People looking for online information on Aishwarya Dhanush, Dhanush, Dhanush son Yatra, S Ve Shekher will find this news story useful.