www.garudabazaar.com

வித்தியாசமான லுக்கில் விஷால்.. "மார்க் ஆண்டனி " படத்தின் கொல மாஸ் FIRST LOOK POSTER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷால் & எஸ். ஜே. சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Vishal SJ Suriyah Ritu Varma Mark Anthony First Look Poster

Also Read | "பிரேமம்" அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் 'GOLD'.. வெளிநாட்டு உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

விஷாலின் 33வது படமாக உருவாகும்  புதிய படமான 'மார்க் ஆண்டனி' படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். 

விஷாலின் 'எனிமி' படத்தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை  தயாரிக்கிறார் .மிக முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில்  வர்மா ,நிழல்கள் ரவி  ஆகியோர் நடிக்கிறார்கள் .இசை அசுரன் ' ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Vishal SJ Suriyah Ritu Varma Mark Anthony First Look Poster

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய 'வலிமை' விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள் . கலை இயக்குனராக உமேஷ் ராஜ்குமார் பணியாற்றுகிறார்.

Vishal SJ Suriyah Ritu Varma Mark Anthony First Look Poster

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. 

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்துக்காக பூந்தமல்லி சுந்தர் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக ஒரு செட் அமைக்கப்பட்டு அதில் ஒரு பாடல்காட்சி படமாக்கப்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. அந்த செட்டில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இணைந்து ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Vishal SJ Suriyah Ritu Varma Mark Anthony First Look Poster

இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இன்று நடிகர் விஷாலின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு 5 மொழிகளிலும் போஸ்டரை வெளியிட்டுள்ளது. மீசை மற்றும் தாடியுடன் கையில் துப்பாக்கி ஏந்திய நிலையில் விஷால் முதல் லுக் போஸ்டரில் தோன்றியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிகை ரீது வர்மா விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷால் & எஸ்.ஜே. சூர்யா இருவரும் இரட்டை வேடத்தில் நடிக்கின்றனர்.

Also Read | போடு வெடிய.. பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் "விக்ரம் Hitlist".. எப்போ? எதுல?

தொடர்புடைய இணைப்புகள்

Vishal SJ Suriyah Ritu Varma Mark Anthony First Look Poster

People looking for online information on Mark Anthony, Mark Anthony First Look Poster, Ritu Varma, Sj suryah, Vishal will find this news story useful.