LIGER D Logo Top
www.garudabazaar.com

PS1 பொன்னியின் செல்வன் படத்தின் இதுவரை காணாத BTS.. கூட யாரெல்லாம் இருக்காங்கனு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய BTS புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Ponniyin Selvan Aishwarya Rai Vikram BTS Images from Ravi Varman ISC

Also Read | ஆஹா..பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் "கண்மணி ராம்போ கதீஜா".. எப்போ? எதுல?

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளன. ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

Ponniyin Selvan Aishwarya Rai Vikram BTS Images from Ravi Varman ISC

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Ponniyin Selvan Aishwarya Rai Vikram BTS Images from Ravi Varman ISC

முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ponniyin Selvan Aishwarya Rai Vikram BTS Images from Ravi Varman ISC

இந்நிலையில் இந்த படத்தின் புதிய BTS புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ISC பகிர்ந்துள்ளார். குதிரை மேல் விக்ரம் மற்றும் கார்த்தி இருப்பது போலவும் & மற்றொரு புகைப்படத்தில்  ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தின் தோற்றத்தில் இருக்கும்  புகைப்படத்தையும் ரவி வர்மன் பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தின் OTT ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ravi Varman (@r_varman)

Also Read | 7 வித்தியாசமான கெட் அப்-களில் விக்ரம்.. வெளிவந்த 'கோப்ரா' படத்தின் மிரட்டலான டிரெய்லர்!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Aishwarya Rai Vikram BTS Images from Ravi Varman ISC

People looking for online information on Aishwarya rai, Karthi, Ponniyin Selvan part 1, Ravi Varman ISC, Vikram will find this news story useful.