Aishwarya Rajnikanth: "பயப்படாத..".. "ஓம்சக்தி.. பராசக்தி" .. ஆடிவெள்ளி அம்மன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.!
முகப்பு > சினிமா செய்திகள்சூப்பர் ரஜினிகாந்த்தின் மகளும் இயக்குநருமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். முன்னதாக தனுஷ் நடிப்பில் மூன்று, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார்.

அதன் பிறகு ஆல்பம் பாடல் ஆக்க பணிகளில் பிஸியாக இருந்த ஐஸ்வர்யா, அண்மையில் அதிக வருமான வரி செலுத்துவதற்காக, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநில சார்பில் வழங்கப்பட்ட கௌரவ சான்றிதழை, தமது தந்தை சார்பில் சென்று பெற்றுக்கொண்ட ஐஸ்வர்யா, பெருமையான மகளாக உணர்ந்ததாகவும் அப்போது தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல் தமது மகன்களை கட்டிக்கொண்டு பாசத்தை பகிர்ந்துகொண்ட ஐஸ்வர்யா, அவர்களுடனான புகைப்படத்துடன் அண்மையில் ஒரு உருக்கமான பதிவையும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளது குறித்து தற்போது பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எனது இந்த வெள்ளிக்கிழமை காலை காளிகாம்பாள் மற்றும் திருவேற்காடு அம்மன் தரிசனம் செய்து அருள் பெற்றேன். அங்கு சென்று அம்மனை பார்க்கும்போது, அம்மன் என்னைப் பார்த்து புன்னகைத்து "ஒருபோதும் பயப்பட வேண்டாம்" என்று சொல்வதாக இருக்கிறது. எப்போதும் என் அருகில் இருக்க வேண்டும் என என் கண்கள் திரும்பி அம்மனிடம் சொல்கின்றன.
மேலும் தீப ஆராதனையின் போது அம்மனது ஆரவாரமான குரல் என்னுள் சத்தமாகவும் தெளிவாகவும் எதிரொலிக்கிறது 🙏🏼 ஓம் சக்தி.. பரா சக்தி #ஆடிவெள்ளி” என்று குறிப்பிட்டுள்ளார்.