www.garudabazaar.com

AK62: நடிகர் அஜித்குமார் - தயாரிப்பாளர் LYCA சுபாஸ்கரன் சந்திப்பு.. வைரலாகும் ஸ்டைலிஷ் PHOTO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா சந்தித்த புகைப்படம் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Ajithkumar with Lyca Productions Subaskaran Allirajah AK62

Also Read | வித்தியாசமான லுக்கில் விஷால்.. "மார்க் ஆண்டனி " படத்தின் கொல மாஸ் FIRST LOOK POSTER!

நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதனை தயாரிப்பு நிறுவனம் அறிக்கை மூலம் அறிவித்தது.

அந்த அறிக்கையில் "திரு.அஜித் குமார் நடிப்பில் திரு.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எங்களின் அடுத்த திரைப்படம் "AK 62", திரு.அனிருத் இசையமைக்க, திரு.சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் எங்களின் அடுத்த படத்தை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும். மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

Ajithkumar with Lyca Productions Subaskaran Allirajah AK62

திரு.அஜித் குமாருடன் கைகோர்த்ததில் லைக்கா மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஒரு குழுவாக, பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க லைக்கா நேர்மையான மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது." என அறிவித்தது.

சில மாதங்களுக்கு முன் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் ரிலீசை ஒட்டி நடந்த மூன்று மணி நேர டிவிட்டர் ஸ்பேஸில்  இயக்குனர் விக்னேஷ் சிவன் AK62 படம் பற்றிய பிரத்யேக தகவல்களை பகிர்ந்தார். அதில், "AK61 படத்தின் திரைக்கதைக்காக மட்டும் இரண்டரை வருடங்கள் முதல் 3 வருடம் வரை உழைத்துள்ளதாக" கூறியிருந்தார்.

Ajithkumar with Lyca Productions Subaskaran Allirajah AK62

இந்நிலையில் இந்த AK62 பட தயாரிப்பாளர் லைக்கா சுபாஸ்கரன் அல்லிராஜா & நடிகர் அஜித்குமார் சந்தித்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகின்றன.

Ajithkumar with Lyca Productions Subaskaran Allirajah AK62

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் ஐரோப்பிய நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு லண்டன் நகரில் தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா லண்டனில் வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "சூரரைப் போற்று" இந்தி ரீமேக்.. பட ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த மாஸ் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Ajithkumar with Lyca Productions Subaskaran Allirajah AK62

People looking for online information on Ajith Kumar, AK62, Allirajah, Lyca Productions, Subaskaran, Subaskaran Allirajah will find this news story useful.