www.garudabazaar.com

"சூரரைப் போற்று" இந்தி ரீமேக்.. பட ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக்கின் ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் புதிய தகவலை அறிவித்துள்ளது.

Akshay Kumar Suriya Soorarai Potru Hindi Remake Release Update

Also Read | "பிரேமம்" அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் 'GOLD'.. வெளிநாட்டு உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 12-ல் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடியில் வெளிவந்த 'சூரரைப் போற்று' திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

கேப்டன் கோபிநாத் அவர்களின் ஏர் டெக்கான் நிறுவனத்தின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து Simply Fly என்ற கோபிநாத்தின் புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட வட்டார மொழி படமாகவும் சூரரைப் போற்று சாதனை படைத்தது.

Akshay Kumar Suriya Soorarai Potru Hindi Remake Release Update

இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அபர்ணா பாலமுரளியும், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ஜி.வி.பிரகாஷ் குமார்

சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை சுதா கொங்கரா,  சிறந்த படத்திற்கான தேசிய விருதை 2டி நிறுவனம் வென்று இருந்தனர்.

சூரரைப் போற்று  படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார்.  சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக இந்த படத்தைத் தயாரிக்கிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Akshay Kumar Suriya Soorarai Potru Hindi Remake Release Update

இன்னும் இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தில் தமிழ் மொழியில் நடித்த அபர்னா பாலமுரளியின் 'பொம்மி' கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா மதன் நடிக்கிறார். இவர் பிரபல இந்தி சீரியல் நடிகை ஆவார். கலர்ஸ் டிவியின் காதல் மெகா சீரியலான மேரி ஆஷிகி தும் சே ஹியில் இஷானி வகேலாவாக நடித்ததற்காக புகழ்பெற்றவர். 2018 ஆம் ஆண்டு விஷால் பரத்வாஜின் படகா என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இர்ஃபான் கான் மற்றும் ஷிதாத் ஆகியோருடன் ஆங்கிரேஸி மீடியம் (2020) படத்தில் ராதிகா கதாநாயகியாக நடித்தார்.  தற்போது சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிலும் நடிக்கிறார்.

Akshay Kumar Suriya Soorarai Potru Hindi Remake Release Update

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என வதந்திகள் பரவின. இந்த வதந்தியை மறுத்து படத்தயாரிப்பு நிறுவனம் "இந்த படம் திரையரங்குகளில் தான் வெளியாகும்" என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | வித்தியாசமான லுக்கில் விஷால்.. "மார்க் ஆண்டனி " படத்தின் கொல மாஸ் FIRST LOOK POSTER!

தொடர்புடைய இணைப்புகள்

Akshay Kumar Suriya Soorarai Potru Hindi Remake Release Update

People looking for online information on Akshay Kumar, Soorarai Potru Hindi Remake, Soorarai Potru Hindi Remake Release Update, Soorarai Pottru, Suriya will find this news story useful.