'வெறும் 87 ரூபாய்க்கு ஏலத்திற்கு வரும் வீடுகள்!!!'... 'அதுவும் எந்த நாட்டுலனு தெரியுமா?'... 'அசத்தல் அறிவிப்புக்குப்பின் இப்படியொரு காரணமா?!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்சலேமி நகரில் தொடக்க விலையாக வெறும் ஒரு யூரோவிற்கு வீடுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இத்தாலி நாட்டிலுள்ள சிசிலி பகுதியின் தென் மேற்கு பகுதில் உள்ள நகரமான சலேமி மிகவும் அழகு பொருந்திய இத்தாலியின் வரலாற்று சிறப்புமிக்க தலங்களில் ஒன்றாகும். இதை சுற்றி ஏராளமான திராட்சை தோட்டங்களும், ஆலிவ் தோப்புகளும் இருக்கின்றன. மிக பழைமையான நகரமான சலேமியில் 1600களில் கட்டமைக்கப்பட்ட சுவர்கள் இன்னும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் நிலையில், 1968ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கிருந்து 4000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறிவிட்டதால் தற்போது அது ஒரு கைவிடப்பட்ட நகரமாக உள்ளது.
இந்நிலையில் சலேமி நகரத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பதற்காக அங்கிருக்கும் வீடுகளை தொடக்க விலையாக வெறும் 1 யூரோவுக்கு ஏலத்தில் விற்பனை செய்ய இத்தாலி அரசு முடிவு செய்துள்ளது. ஒரு யூரோவின் இந்திய ரூபாய் மதிப்பு 87 ரூபாய் ஆகும். தற்போது சலேமியில் இருக்கும் அனைத்து வீடுகளும் நகர கவுன்சிலுக்கு சொந்தமானவையாக உள்ள சூழலில், இப்படி அந்த நகரிலுள்ள வீடுகளை ஏலத்தில் விற்பனை செய்வதால் கைவிடப்பட்ட அழகிய சலேமி நகருக்கு புத்துயிர் கிடைக்கும் என நம்புவதாக அந்நகர மேயர் டொமெனிகோ வெனுடி தெரிவித்துள்ளார். மேலும் தற்போது சலேமி அடுத்தகட்டத்துக்கு தயாராகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு கைவிடப்பட்ட இத்தாலிய நகரங்களில் மிகக் குறைவான விலைக்கு வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. மக்கள் வெளியேற்றத்தை தடுக்கவும், புதிய மக்களை அழைத்துவந்து பழைய நகரங்களுக்கு புத்துயிர் ஊட்டவும் அங்கு குறைந்த விலையில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தெற்கு இத்தாலியில் உள்ள சம்புகா நகரில் வெறும் ஒரு டாலருக்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.