‘100 வருடம் பழமையான 1 ரூபாய் நாணயத்துக்கு ரூ.25 லட்சமா?’.. ‘அடிச்சுது ஜாக்பாட்னு நினைச்சவங்களுக்கு’.. ‘ஆன்லைன் வர்த்தக நிறுவனம் கூறியது என்ன?’
முகப்பு > செய்திகள் > இந்தியாஅக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் B2B ஆன்லைன் சந்தையில் பழைய நாணயங்களை விற்பதன் மூலம் மக்கள் “கூடுதல் பணம் சம்பாதிக்கலாம்” என்று பல ஊடக அறிக்கைகள் வெளிவந்தன.
அதாவது இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சந்தை நிறுவனமான இந்தியா மார்ட் பழங்காலப் பொருட்களுக்கான ஏலம் நடத்துவதாகவும், அதன் பொருட்டு, பழங்கால, அரிய நாணயங்களைப் பெற்றுக்கொள்வதாகவும் குறிப்பாக, 1913ஆம் ஆண்டு ஒரு ரூபாய் நாணயத்தை ஏலத்தில் வைத்தால் 25 லட்சம் ரூபாயும், 18ஆம் நூற்றாண்டில் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் தயாரித்த நாணயம் இருந்தால் ரூ.10 லட்சம் ரூபாயும் தரப்படுவதாகக் கூறி, சில தகவல்கள் பல செய்தி நிறுவனங்கள் மூலம் பரப்பப் பட்டன.
இதனால் அக்டோபர் 19 அன்று இந்தியாமார்ட் இன்டர்மேஷின் பங்குகள் 4.5 சதவீதம் சரிந்தன, பிஎஸ்இ-யில் முந்தைய ரூ 5,017.85 ஐ விட ரூ 222.85 (4.44 சதவீதம்) சரிந்த பின்னர் ரூ 4,795 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. இந்த பங்கு இப்போது (அக்டோபர் 19 மாலை 15.25 மணி) ரூ 47.85 (3.35 சதவீதம்) குறைந்து ரூ 4,850 ஆக உள்ளது.
இதனிடையே இது பற்றி பேசிய இந்நிறுவனம், அந்த செய்தி, நிறுவனத்திடமிருந்து எந்த உறுதிப்பாடும் பெறப்படாமல் பதிவிடப்பட்டது என்றும், உள்ளது மற்றும் நிறுவனத்தின் தரப்பில் இதுபோன்ற ஏலங்கள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் இதுபோன்ற எந்தவொரு ஏலத்தையும் செய்ய நிறுவனம் வேறு எந்த தரப்பினருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என்பதையும், அதன்படி எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை தங்கள் பெயரில் நடத்த உரிமை இல்லை என்பதையும்தெளிவுபடுத்த விரும்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.