இந்தியா சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் F-16 விமானத்தின் புகைப்படம் வெளியீடு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 28, 2019 01:37 PM

இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானத்தின் உடைந்த பாகங்களின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Picture of portion of downed Pakistani Air Force jet F16

புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் அதிகமான இந்திய துணை ராணுவப்படை வீர்ரகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பயங்கரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய ராணுவம் வீசியது. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக குஜராத் மாநிலம் கட்ச் என்னும் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா சிறிய ரக விமானமான ட்ரோன் பறந்து வந்தது. இதனை அடுத்து ட்ரோனை உடனடியாக இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இந்த ட்ரோன் மூலம் இந்திய எல்லையை  உளவு பார்க்க பாகிஸ்தான் அனுப்பியிருக்கலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானம் நேற்று இந்திய எல்லைக்குள் நுழைந்தது. இதனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் விழுந்தன. இதனை அடுத்து உடைந்த பாகிஸ்தானின் F-16 ரக போர் விமான பாகங்களின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Tags : #INDIANAIRFORCE #SURGICALSTRIKES2 #PAKISTAN #F16