"மகா பிரபு.. நீங்க இங்கயும் வந்துட்டீங்களா!"... 'கிட்ஸ்களுக்காக கனடா 'பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின்' அடுத்த 'பிரவேசம்'.. நிறையும் பாராட்டுகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 11, 2020 11:58 PM

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸை எதிர்கொண்டு உலகம் தினந்தினம் திணறி வருகிறது. இந்நிலையில் உலக நாடுகள் பலவும் இந்த வைரஸ் பிடியிலிருந்து தங்கள் நாட்டு மக்களை விடுவிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் மும்முரமாக செயலாற்றி வருகின்றன.

Canada Prime Minister justin trudeau Started to help kids homework

அந்த வகையில் கொரோனாவால் ஏற்படும் பொருளாதார சரிவு, வேலை இழப்பு, தனிமனித சிக்கல்கள் உள்ளிட்டவற்றையும் சமாளித்து, கனடா மக்களின் அன்றாட வாழ்க்கையில் புதுப்புது விஷயங்களை மலர்த்தி வருகிறது கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ அரசு. இதன் ஒரு பகுதியாக அண்மையில் மருத்துவ பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பொருளாதார சரிவால் வேலையை இழக்கும் ஊழியர்களை காப்பாற்றுவதற்காக நிறுவனங்களுக்கு மானியம் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை கனடா பிரதமர் அடுத்தடுத்து அறிவித்தார்.  சுகாதாரம், பேரிடர், பொருளாதாரம் என அனைத்திலும் சிறப்பாக செயலாற்ற முயற்சி செய்யும் கனடா பிரதமர் அடுத்து கல்வித் துறையிலும் கால் பதித்துள்ளார்.  அதன்படி மாணவர்களின் வகுப்புகள் தடைபடாமல் இருக்க கான்ஃபரன்சிங் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாணவர்களுக்கு கல்வி சார்ந்த உதவி செய்வதற்கு கனடா பிரதமர் தன்னுடைய அடுத்த பிரவேசத்தையும் தொடங்கியுள்ளார்.

ஆம், அரசியலுக்கு வருவதற்கு முன்பாக ஆசிரியராக கொலம்பியாவில் உள்ள வான்கூவர் பகுதியில் பணியாற்றியவர்தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கணிதம், பிரெஞ்சு, நாடகம் உள்ளிட்ட பாடங்களில் இவர் தேர்ந்தவர் என்று கூறப்படும் நிலையில் இந்த ஊரடங்கு நேரத்தில் நெருக்கடியான சூழலில் தனது கற்பிக்கும் திறனை பயன்படுத்தி வீட்டிலிருந்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்களை செய்வதற்கு உதவி செய்ய தான் விரும்புவதாக அவர் ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசியவர்,  “நாம் எல்லாருமே தற்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் சமையலறை மேஜையில் மீது அமர்ந்து உங்களது வீட்டுப்பாடங்களை செய்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயமாக இருக்காது. உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்கள் ஆசிரியர்களின் பணிக்கு 

தங்களது பாராட்டுக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். நானும் ஒரு ஆசிரியராக பிற ஆசிரிய நண்பர்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவ விரும்புகிறேன்.  பெற்றோர்களே!  #CanadaHomeworkHelp என்கிற இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தியோ அல்லது இந்த ட்வீட்டுக்கு ரிப்ளை செய்வதன் வழியாகவோ வீட்டுப்பாடம் செய்வது தொடர்பான சிக்கல்களை குழந்தைகள் எதிர்கொண்டால், அந்த கடினமான கேள்விகளை எனக்கு தெரியப்படுத்துங்கள். என்னால் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.