நடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னையில் நிற்கிறாரா நடிகர் பவர் ஸ்டார்..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 20, 2019 06:27 PM

இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளராக பவர் ஸ்டார் சீனிவாசன் போட்டியிடவுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

Actor power star srinivasan to compete in lok sabha elections 2019

உண்மையில், இந்திய குடியரசு கட்சி என்று இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் இந்த கட்சிப் பிரிவுகளுள், முதன்மையானதுதான் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சியின் ஏ பிரிவு. இந்த கட்சிதான் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் சூசை குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் பிறந்த இக்கட்சியில்தான் கடந்த ஓராண்டுக்கு முன்பாக சேர்ந்த பவர் ஸ்டார் சீனிவாசன், அக்கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்து வருகிறார். அவர் தற்போது அக்கட்சியின் சார்பில் தென் சென்னையில் போட்டியிடவுள்ளதாகவும், இன்னும் 2 நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பத்திரிகை ஒன்றிற்கு கூறியுள்ளார்.

தமிழகத்தில் 10 தொகுதிகளில் நிற்கவுள்ள இந்த கட்சியின் சார்பில் தென் சென்னையில் போட்டியிடவுள்ள பவர் ஸ்டார், அந்த தொகுதியில் தனக்கு போட்டியாக ரஜினியையே கருதுவதாகவும், ஆனால் அவர் சந்திக்காத இந்த தேர்தலை தான் தைரியமாக சந்திக்கவுள்ளதாகவும் மக்களைப் பொருத்தவரை தன்னைப் பற்றிய அறிமுகமே தேவையில்லை என்றும் அவர்களுக்கு செல்லப் பிள்ளையான தன்னை வெற்றி பெற வைப்பார்கள் என்றும் கூறும் பவர் ஸ்டார், மக்களை நம்பி காந்தி வழியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் சூசை உறுதிப்படுத்தியுள்ளார். 

Tags : #KAMALHAASAN #LOKSABHAELECTIONS2019 #POWERSTARSRINIVASAN