'அறையில் இரண்டு கதவுகள்'...திகில் கிளப்பியிருக்கும்...பெண் மருத்துவரின் மர்ம மரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Mar 04, 2019 02:43 PM

28 வயது பெண் டாக்டர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் டெல்லியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவரின் மரணத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளார்கள்.

Dr Aastha Munjal working at Maharaja Agrasen Hospital was found dead

மேற்கு டெல்லி பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் உதய் திங்காரா - அஸ்தா முஞ்சால்.மருத்துவ தம்பதியர்களான இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணி புரிந்து வருகிறார்கள்.இதனிடையே நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பணிக்குச் சென்ற அஸ்தா முஞ்சால் மறுநாள் காலை 6 மணியளவில் அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்த முதல் கட்ட தகவல் வெளியாகாத நிலையில்,அஸ்தாவின் மர்ம மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அஸ்தாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் டெல்லி மேற்கு காவல்துறை துணை ஆணையர் கூறுகையில் ''நியூராலஜி டாக்டரான அஸ்தா முஞ்சால் மருத்துவர்களின் ஓய்வு அறையில் இறந்து கிடப்பதாக நேற்று அதிகாலை 5.50 மணிக்கு காவல்துறைக்கு தகவல் வந்தது.உடனே மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது.

அதில் அதில் நள்ளிரவு 12.15 வரை வேலை பார்த்துக்கொண்டிருந்த அஸ்தா சரியாக 12.18 -க்கு மருத்துவர்கள் அறைக்குள் நுழைகிறார். அதன்பிறகு அதிகாலை 4.30 -க்கு ஒருவர் அஸ்தா இருந்த அறையின் கதவை தட்டுகிறார். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை. பின்னர் பாதுகாவலர்கள் அதிகாலை 5.15 -க்கு வந்து கதவை உடைத்துத் திறந்துள்ளார்.

இந்தக் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருக்கின்றன.அஸ்தா உடலின் அருகே ஒரு ஊசியும் இருந்தது. கூடவே அவர் உடலில் ஊசி செலுத்தியதற்கான அடையாளமும் இருக்கிறது.இதனால் பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே இது குறித்து பேசிய அஸ்தாவின் உறவினர் ஒருவர் ''மருத்துவமனையில் சில முறைகேடுகள் நடந்தன.அதற்கு எதிராக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.இதனால் சில நாட்களாகவே அஸ்தா மன உளைச்சலில் தான் இருந்தார்.எனவே அஸ்தாவின் மரணம் குறித்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவரின் தந்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் அஸ்தா இறந்து கிடந்த அறையில் இரண்டு கதவுகள் இருந்த நிலையில்,ஏன் ஒரு கதவை உடைத்து பாதுகாவலர்கள் உள்ளே சென்றார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.இதனால் அஸ்தாவின் மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Tags : #MURDER #DR AASTHA MUNJAL