'தந்தையை கொடூரமாக கொன்றுவிட்டு...தாயை கத்தியால் குத்திய எம்.பி.ஏ பட்டதாரி'...அதிரவைக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 09, 2019 03:31 PM

உறவினர் மற்றும் நண்பர்களுடன் குடிபோதையில் பிரச்னை செய்த மகனை தட்டிக்கேட்ட பெற்றோரை,மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Son kills father in Dindigul

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் வினோத்.எம்.பி.ஏ படித்திருக்கும் இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.இவரது பொற்றோர்களான செல்வராஜ்- மஹாலட்சுமி ஆகிய இருவரும் தள்ளுவண்டி கடையில் பிரியாணி வியாபாரம் செய்து வருகிறார்கள்.அதிகமான குடி பழக்கம் உடையே வினோத்,அவ்வப்போது குடித்துவிட்டு பிரச்சனைகளில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில் அதிகாலையில் போதை மயக்கத்தில் இருந்த வினோத்,தனது வீட்டின் அருகில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பிரச்னை செய்திருக்கிறார்.அப்போது அங்கு வந்த  செல்வராஜ் அதனை தட்டி கேட்டிருக்கிறார்.இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.அப்போது உடனிருந்த தாய் மஹாலட்சுமியும் வினோத்தை கடுமையாக கண்டித்திருக்கிறார்.இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற வினோத்,தனது தந்தை என்றும் பாராமல் செல்வராஜை அம்மி கல்லால் அடித்து கொலை செய்திருக்கிறார்.தடுக்க வந்த தாய் மஹாலட்சுமீயை,கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர்,கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து குடிப்போதையிலிருந்த வினோத்தை கைது செய்தனர்.குடிபோதையில் மகனே தந்தையை கொடூரமாக கொலை செய்துவிட்டு,தாயையும் கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #DINDIGUL