ஆன்லைனில் விஷம் வாங்கி சாப்பாட்டில் வைத்து மனைவியை கொலை செய்த பேராசிரியர்.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 08, 2019 11:16 PM

கல்லூரி பேராசிரியர் பலியான விவகாரத்தில் அவரது கணவர் ஆன்லைனில் விஷம் வைத்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband bought poison online and killed his wife

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வெள்ளியோடு என்கிற பகுதியில் உள்ள கல்லூரி பேராசிரியர் பெல்லார்மின் என்பவருக்கும் வியன்னூர் பகுதியை சேர்ந்த கல்லூரி பேராசிரியை திவ்யா என்பருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

ஆனால் பெல்லார்மின் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதனால் தனது மனைவியான திவ்யாவை தன்னைவிட்டு பிரிந்து செல்லுமாறு கூறிவந்துள்ளார். இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை வந்ததாக கூறுகின்றனர். இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென ரத்த வாந்தி எடுத்து திவ்யா இறந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யாவின் பெற்றோர் இது தொடர்பாக பெல்லார்மின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக போலிஸார் நடத்திய விசாரணையில், ஆன்லைனில் விஷம் வாங்கி அதை சாப்பாட்டில் கலந்து திவ்யாவைக் கொலை செய்ததாக பெல்லார்மின் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KANYAKUMARI #PROFESSOR #WIFE #POISON #ONLINE #CRIME