கணவரின் 1வது மனைவியின் 2 மகள்களின் உதவியுடன் 3வது மனைவியை கொன்ற 2வது மனைவி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 08, 2019 04:03 PM

மும்பை மகாராஷ்டிராவுக்கு உட்பட்ட நல்லசோபரா அருகே வசித்து வரும் சுசில் மிஸ்ரா என்பவருக்கு இரண்டு மனைவிகள் இருந்துள்ளனர்.  இதில் முதல் மனைவி தனது இரண்டு மகள்களுடன் உத்தரபிரதேசத்தில் இருந்தபோது, 2017-ஆம் வருடம் சுசில் பார்வதி என்கிற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

1st wife\'s daughters helped 2nd wife of a man to kill his 3rd wife

பின்னர் முதல் மனைவியின் இரண்டு மகள்களையும், தனது இரண்டாவது மனைவியையும் அழைத்துக்கொண்டு மீண்டும் நல்லசோபராவுக்கு வந்து சுசில் வாழ்ந்துள்ளார். அப்படி இருந்துகொண்டிருந்த சமயத்தில்தான் 3-வதாக யோகிதா என்கிற பெண்ணை திருமணம் செய்து தனது குடும்பத்தினருக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.

ஆனால் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, சுசிலின் 3-வது மனைவி யோகிதா போர்வையால் சுற்றப்பட்டு குப்பைக்கிடங்கு ஒன்றில்,  சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவ்வழக்கு விசாரணையைத் தொடங்கிய போலீஸார், சுசிலின் 2வது மனைவியான பார்வதியை விசாரித்தபோதுதான் சில அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள் கிடைத்தன.

அதன்படி, சுசில் 3-வது திருமணம் செய்த பிறகு,  சுசிலின் முதல் மனைவிக்கு பிறந்த 2 மகள்களுடன் வசித்துக்கொண்டிருந்த தனது வீட்டுக்கு சுசில் வரவில்லை என்றும், அவரையே நம்பியிருக்கும் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு அவர் பணம் தராமல் இருந்துள்ளார் என்றும் சுசிலின் 2-வது மனைவி பார்வதி குறிப்பிட்டுள்ளார். இதற்கெல்லாம் சுசிலின் 3-வது மனைவி யோகிதாவே காரணம் என்கிற கோபத்தில், யோகிதாவை கொலை செய்துவிட பார்வதி திட்டமிட்டது போலீஸாரின் விசாரணையில் வெளிவந்தது.

ஆனால் தனி ஆளாக இதைச் செய்யவியலாத பார்வதி, தனது கணவர் சுசிலின் முதல் மனைவிக்கு பிறந்த 2 மகள்களின் உதவியை நாடியுள்ளார். அந்த பெண்களின் துணையோடும், கூடுதலான ஒரு நண்பரைச் சேர்த்துக்கொண்டும் யோகிதாவை சமயம் பார்த்து கொன்றுள்ள இந்த கும்பல், யோகிதாவின் சடலத்தை போர்வையில் சுற்றி ஆட்டோவில் எடுத்துச் சென்று ஓரிடத்தில் வீசியுள்ளது.

அதிரவைத்த இந்த வழக்கில், போலீஸார் பார்வதியையும் உடந்தையாக இருந்த இன்னொருவரையும் கைது செய்துள்ளதோடு, சுசிலின் முதல் மனைவியின் 2 மகள்களையும் குற்றம் செய்திருந்தாலும் மைனர் பெண்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.

Tags : #MUMBAI #BIZARRE #CRIME