'உப்புமாவில் விஷம் வைத்து...மனைவியை கொன்ற பேராசிரியர்'...அதிரவைக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 07, 2019 01:25 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் உப்புமாவில் விஷம் வைத்து,கல்லூரி பேராசிரியர் மனைவியை கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதற்கு உடந்தையாக இருந்த கல்லூரி பேராசிரியரின் பெற்றோரும் கைது செய்யப்பட்டனர்.

Police has been arrested a professor for killing his wife

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே வெள்ளியோடு பகுதியைச் சேர்ந்தவர் பெல்லார்மின்.பொறியியல் பட்டதாரியான இவர்,பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார்.இவருக்கும் வியன்னூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் சில்வெஸ்டர் என்பவரின் மகள் திவ்யாவுக்கும் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

திவ்யாவும் பொறியியல் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.இதனிடையே இருவரின் திருமண வாழ்வும் மகிழ்ச்சியாக செல்லவில்லை.பெல்லார்மின் தான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அதனால் என்னை விவாகரத்து செய்துவிட்டு செல்லும்படி திவ்யாவிடம் கூறியுள்ளார்.இதனால் இவருவருக்கும் அவ்வப்போது பிரச்னை இருந்து வந்துள்ளது.

ஆனால் பெல்லார்மின் கூறியதை திவ்யா ஏற்க மறுத்ததால்,உன்னை கொலை செய்துவிடுவேன் என  பெல்லார்மின்  மிரட்டியுள்ளார்.இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு,திவ்யாவிடம் பாதரசத்தை குடிக்கும்படி கடுமையாக வற்புறுத்தியுள்ளார்.ஆனால் அவர் அதனை தட்டிவிட அது திவ்யாவின் நகைகள் மீது பட்டு சேதமடைந்துள்ளது.இந்த சம்பத்தினால் மிகவும் பயந்துபோன திவ்யா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.திவ்யாவின் பெற்றோரும் அவரை சமாதானப்படுத்தி கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என பெல்லார்மின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே நேற்று வீட்டிலிருந்த பெல்லார்மின்,மனைவி திவ்யாவிற்கு உப்புமாவை சாப்பிடக் கொடுத்துள்ளார்.கணவர் திருந்தி விட்டார் என எண்ணிய திவ்யா சந்தோஷத்தில் அதனை சாப்பிட்டுள்ளார்.அவர் என்ன சாப்பிட்டாலும் அந்த உணவில் பாதியினை அவர் வளர்க்கும் நாய்க்கும் கொடுப்பது வழக்கம்.அதே போல் அவர் சாப்பிட்டு மீதியிருந்த உப்புமாவை அந்த நாய்க்கும் வைத்துள்ளார்.

இதனிடையே திவ்யா சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவரது உடலில் பல மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருக்கிறது. உடனே ரத்த வாந்தியும் எடுத்துள்ளார்.இதனால் பயந்து போன அவர்,உதவிக்கு கணவர்  பெல்லார்மின் மற்றும் அவரது பெற்றோரை அழைத்துள்ளார்.ஆனால் அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

இதையடுத்து, தனது மொபைல்போனில் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து நிலைமையை கூறியுள்ளார்.உடனே திவ்யாவின் வீட்டிற்கு விரைந்துவந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்,அவரை தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் திவ்யாவிடம் மரண வாக்குமூலம் பெற்றனர்.அதன் அடிப்படையில் திவ்யாவின் கணவர் பெல்லார்மின் மற்றும் அவரின் பெற்றோரை காவல்துறையினர் கைது செய்தனர்.இதனிடையே வீட்டில் இறந்து கிடந்த நாய் மற்றும் மீதமிருந்த உணவுப் பொருள்களை கைப்பற்றிய காவல்துறையினர் அவற்றை சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

பேராசிரியரான கணவரே மனைவியை விஷம் வைத்துக் கொன்றதும் அதற்கு அவரது பெற்றோரும் உறுதுணையாக இருந்தது அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #PROFESSOR #KANYAKUMARI