‘எந்த தண்ணிய சொல்றாங்கன்னு தெரியலயே?’.. கமல் கிண்டல்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Siva Sankar | Feb 22, 2019 06:15 PM

நிரூபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, அதிமுகவை சூசகமாக கிண்டல் செய்துவிட்டு கமல் உதிர்த்துவிட்டுச் சென்றுள்ள பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

kamalhaasan trolls over ADMKs answers to rajini in a newspaper

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதால், சுவாரஸ்யமான அரசியல் நிகழ்வுகளுக்கும் காரசாரமான சாடல்களுக்கும், கிண்டல் கேலிகளுக்கும் குறைவில்லாமல் தொடங்கியது நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த முன்நிகழ்வுகள்.

இதில் ஒரு அங்கமாக, சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் , ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட அறிக்கையின்படி, ‘நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கப் போவதில்லை. எங்களது இலக்கு சட்டமன்றத் தேர்தல்தான்’ என்று திட்டவட்டமாகவும் அதிகாரப்பூர்வமாகவும் வெளியாகியது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆதரவு பற்றி கேட்டபோது, ரஜினிகாந்த், ‘தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க வல்ல கட்சி எந்த கட்சியோ, அந்த கட்சிக்கே தங்களது ஆதரவு’ என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்தின் அறிக்கைபடி, தண்ணீர்ப் பிரச்சனையை தீர்த்து வைக்கும் கட்சி எந்த கட்சியோ அந்த கட்சிக்குத்தான் தங்களது ஆதரவு என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார் என்றால், சந்தேகத்துக்கு இடமின்றி ரஜினியின் முழுமையான ஆதரவு அதிமுகவுக்குத்தான் என்று அதிமுகவின் கொள்கைகளை பேசும் நமது அம்மா நாளிதழில் குறிப்ப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம் கேள்வி ஒன்றை பெண் நிரூபர் ஒருவர் கேட்டதற்கு, அதற்கு பதில் அளிக்கும் விதமாக கமல், மிகவும் கிண்டலாக, ‘அவங்க எந்த தண்ணிய சொல்றாங்கன்னு தெரியலயே’ என்று சொல்லிவிட்டு சிரித்தபடி நகர்ந்துள்ளார். அதாவது தண்ணீர்ப் பிரச்சனையை தீர்க்கும் கட்சி என்று ரஜினி சொன்னதை தங்களுக்கென்று பிரகடனப்படுத்திக்கொள்ளும் அதிமுக குறிப்பிடுவது எந்த தண்ணியை என்று தெரியவில்லை என்கிற தொனியில் கமல் இத்தகைய பதிலை தந்துவிட்டுச் சென்றுள்ளார்.

Tags : #AIADMK #RAJINIKANTH #KAMALHAASAN