நாலாபுறமும் பறந்த சிக்ஸர்கள்.. தொடக்கமே சாதனை.. அதிரடி காட்டிய யுனிவெர்சல் பாஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 25, 2019 10:00 PM

2019 ஐபிஎல் டி20 லீக்கின் அடுத்த போட்டி இன்று(25.03.2019) ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய இரு அணிகள் மோதுகின்றன.

RR KXIP: Another brutal innings from universal boss

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், கிறிஸ் கெய்லும் களமிறங்கினர். இதில் ராகுல் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த கெய்ல் மற்றும் மயநாக் அகர்வால் ஜோடி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இதில் கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் 79 ரன்களை அடுத்து அதிரடி காட்டினார். இதில் 112 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை கெய்ல் படைத்துள்ளார். இதற்கு முன் 114 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4000 ரன்களை வார்னர் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #IPL2019 #IPL #RRVSKXIP #GAYLE