தலைநகரம் சென்ற தல’யின் படை.. ‘தடபுடலான வரவேற்பு’.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 25, 2019 11:37 PM

ஐபிஎல் டி20 லீக்கின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முடிந்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

WATCH: Chennai Super Kings released new video

இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடஸ் அணிகளுக்கு இடையேயான அடுத்த டி20 போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக சூப்பர் கிங்ஸ் வீரர்கள் டெல்லி சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமானம் மூலம் டெல்லி சென்ற சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வீடியோயை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #WHISTLEPODU #YELLOVE #CSK #MSDHONI #VIRALVIDEO