CSK-வின் அடுத்த ஹோம் மேட்ச்.. களைகட்டிய டிக்கெட் கவுண்ட்டர்கள்.. குவிந்த ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Mar 25, 2019 05:22 PM
ஐபிஎல் சீசன் தொடக்கம் முதலே இம்முறை களைகட்டிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களைப் பொருத்தவரை இந்த ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் அவர்கள் ஏமாறவில்லை. ஆர்சிபியுடனான ஹோம் மேட்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் சொந்த கிரவுண்டில் நின்று விளையாடியதால் அநேகமான ஆர்சிபி ரசிகர்கள் பெருத்த சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஆனால் சிஎஸ்கே ஆர்சிபியுடன் மோதுகிற தொடக்க ஆட்டத்தில், அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹோம் மேட்ச்சுக்கான டிக்கெட்டுகள் விற்கத் தொடங்கியதுமே கடகடவென விற்றுத் தீர்ந்தன. அந்த டிக்கெட் தொகைகள் அனைத்தும் புல்வாமா தாக்குதலில் பலியான, இந்திய துணை நிலை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அளித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னதாக குறிப்பிட்டது போலவே இதை ஹோம் மேட்ச் அன்று தோனியின் கைகளாள் இந்திய ராணுவத் தளபதியிடம் வழங்கியது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த ஹோம் மேட்சுக்கான டிக்கெட் விற்பனை பற்றிய முழு விபரங்களையும் அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ள, (சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்)இரண்டாவது ஹோம் மேட்சானது வரும் மார்ச் 31- ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நிகழவுள்ளது.
இதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் BookMyShow இணையதளத்தில் இன்று (மார்ச் 26-ஆம் தேதி) காலை 8.45 மணி முதல் தொடங்குகிறது. கவுண்டர்களில் பெறப்படும் டிக்கெட்டுகளைப் பொருத்தவரை, டிக்கெட் விற்பனையின் முதல் நாளான இன்று (மார்ச் 26-ஆம் தேதி) மட்டும் காலை 10 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலும் அடுத்தடுத்த நாட்களில் காலை 8.45 மணி முதல் கவுண்டர்களில் டிக்கெட்டுகளை பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கவுண்டர்களை பொருத்தவரை எல்லா நாட்களிலும் மதியம் 12.30 முதல் 2 மணிவரை உணவு இடைவேளையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
The kind of news you want to hear on a Monday morning! Get the whistles and cheer #Yellove at the #AnbuDen! 🦁💛 https://t.co/aijwvMGbme
— Chennai Super Kings (@ChennaiIPL) March 25, 2019
