மாஸ் காட்டிய சிஎஸ்கேவின் சின்ன ‘தல’.. டி20 போட்டியில் படைத்த இமாலய சாதனை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 01, 2019 08:13 PM
இந்தியாவில் நடந்த டி20 போட்டிகளில் விளையாடி புதியதொரு வரலாற்று சாதனையை சுரேஷ் ரெய்னா படைத்துள்ளார்.
நேற்று(31.03.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் சுரேஷ் ரெய்னா 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 75 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இப்போட்டியில், சுரேஸ் ரெய்னா 36 ரன்களை அடித்ததன் மூலம் இந்தியாவில் நடந்த டி20 போட்டிகளில் 6000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அடைகிறார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் 175 போட்டிகளில் விளையாடி 5000 ரன்களை ரெய்னா கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.