சிக்ஸர் மழை பொழிந்த சின்ன ‘தல’.. பயிற்சி ஆட்டத்தில் அரைசதம் அடித்து அதிரடி காட்டிய வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 18, 2019 07:51 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தின் போது சுரேஷ் ரெய்னா 29 பந்துகளில் 56 ரன்கள் விளாசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: CSK released Suresh Raina innings from the practice match

12 -வது சீசன் ஐபிஎல் டி20 போட்டிகள் வரும் மார்ச் மாதம் 23 -ம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது. இதன் தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கான பயிற்சி ஆட்டம் நேற்று(17.03.2019) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதனைக் காண சுமார் 12 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்தனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து விளையாடினர்.

இதில் 3 -வது வீரராக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 29 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 6 சிக்ஸர்களும், 1 பவுண்ட்ரிகளும் அடங்கும். ரெய்னா விளையாடும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #IPL2019 #CSK #CHINNATHALA #WHISTLEPODU #SUPERPRACTICE #SURESHRAINA