நான் ‘சச்சின்’ரசிகன்தான்.. ‘எப்படி தோனி ரசிகனா ஆனேன் தெரியுமா?’.. ‘தல’யின் வெறித்தனமான ரசிகனின் பதில்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 20, 2019 10:47 PM

சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் தான் தோனியின் ரசிகனாக மாறியது பற்றி தெரிவித்துள்ளார்.

WATCH: CSK SuperFan Saravanan\'s interview

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனிக்கு உலகம்  முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தற்போது ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் மார்ச் 23 -ம் தேதி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 முறை ஐபிஎல் தொடரை வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் தனது உடம்பு முழுக்க மஞ்சள் வண்ணத்துடன் தோனி என பெயர் பதித்த சிஎஸ்கே ஆடை அணிந்து மைதானத்தில் இருக்கும் ரசிகரை அனைவரும் பார்த்திருக்க வாய்ய்ப்புள்ளது. சென்னை சேர்ந்த தீவிர தோனியின் ரசிகனான சரவணன் என்பவர் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

அதில்,‘கபில் தேவ்னு ஒரு மனுசன் இல்லனா கிரிக்கெட்டே இல்லனு இருந்த காலகட்டம் அது. அவர் மட்டும் வேல்ர்ட் கப் ஜெயிக்கலனா கிரிக்கெட்டே வளர்ந்துருக்காதுனு நாங்க சின்னவயசா இருக்கும் போது சொல்லுவாங்க. ஆனா உலகக் கோப்பையில தோனி பெரிய ரிஸ்ட் எடுத்து ஜெயிச்சு கொடுத்தாரு. கண்டிப்பா கம்பீரும் நல்லா விளையாடினார். யாருவந்தாலும் சச்சின்தான் கிரிக்கெட்டின் கடவுள். சச்சினோட கனவை நிறைவேற்றினவர் தோனி. நான் சச்சின் ரசிகன்தான் ஆனா உலகக் கோப்பைக்கு பிறகு தோனியின் ரசிகனாக மாறினேன்’ என அவர் கூறியுள்ளார்.

Tags : #IPL #IPL2019 #CSK #MSDHONI #WHISTLEPODU #YELLOVEAGAIN 🦁💛 #ANBUDEN