‘சிஎஸ்கே ஆர்மி ஆர்யூ ரெடி’..‘வெளியான அதிரடி அப்டேட்’..அடுத்த சாதனையை அடிச்சுத்தூக்கலாமா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 22, 2019 11:22 PM

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் அடுத்த போட்டிக்கான டிக்கெட் விற்கப்படும் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

Ticket opened for next csk\'s home match

12 சீசன் ஐபிஎல் போட்டிகள் நாளை(23.03.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதன் தொடக்கப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன.

இப்போட்டியில் விளையாட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நேற்று சென்னை வந்தது. கடந்த முறை ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த முறை முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 2-வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

வரும் 31-ம் தேதி நடைபெற உள்ள போட்டிக்கு டிக்கெட் விற்பனை வருகிற 26 -ம் தேதி காலை 8.45 மணி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே நேரத்தில் இணையத்தின் மூலமும் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #IPL #IPL2019 #CSK #IPL2019 #WHISTLEPODU #YELLOVE