முக்கிய விக்கெட்டை டக் அவுட் ஆக்கிய சின்ன ‘தல’..தெறிக்கவிடும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 23, 2019 09:22 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான ரெய்னா ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய விக்கெட்டை எடுத்து அசத்தியுள்ளார்.

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் இன்று(23.03.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதில் நடப்பு சேம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதகின்றன.
இதில் இந்திய அணியின் இரு முக்கிய வீரர்களான தோனியும், விராட் கோலியும் கேப்டன்களாக களமிறங்கிவதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று போட்டி தொடங்குவதற்கு முன்பாக புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் குடும்பங்களுக்கு ரூ. 20 கோடிக்கான காசோலையை பிசிசிஐ சார்பாக தோனி வழங்கினார். இதனை அடுத்து டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கோலியும், பார்தீவ் பட்டேலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். ராயல் சேலஞ்சரஸ் அணி 4 விக்கெட் இழந்து இருந்த போது இந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஹெட்மெய்ர் இறங்கினார். அப்போது ஹர்பஜன் வீசிய பந்தில் தூக்கி அடித்தார். உடனே ரெய்னாவும், தோனியும் சேர்ந்து அவரை ரன் அவுட்டாக்கி வெளியேற்றியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
